சேலம், டிச.1: சேலம் கருப்பூர் மேட்டுப்பதி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (65). இவர், அந்த பகுதியில் கல் மாவுமில் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இந்த மில்லில் இருந்த இரும்பு பட்டைகள், உருளைகள், மின் மோட்டார் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுபற்றி கருப்பூர் போலீசில் சுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், மாவுமில்லில் இரும்பு பொருட்களை திருடியது, கருப்பூர் மேட்டுப்பதி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கைலாஷ் (19), உதயகுமார் (23) எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன பொருட்களை மீட்டனர். கைதான 2 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

