Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மல்டிடாஸ்கிங் பெண்களுக்கான புத்துணர்வு லேகியம்!

நன்றி குங்குமம் தோழி

மல்டிடாஸ்கிங் செய்வதே பெண்களின் குணம் என்றாலும், இன்றைய சூழலில் ஓய்வில்லாமல் பரபரப்பாக ஏதேனும் வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் மீது கூடுதல் அக்கறையெடுத்து உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம் கருதி சில மருத்துவக் குறிப்புகளை பகிர்கிறார், ஆயுர்வேத டாக்டர் ஆஷிகா.

“நம் உடலுக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலே ஆரோக்கியத்தை பேண முடியும். ஆனால், அன்றாட நாட்களில் நம் உடலுக்குத் தேவையான எல்லா வகையான சத்துக்களையும் உணவு மூலமாக பெற்றுக்கொள்ள தவறவிடுகிறோம். வலுவான வேலைகளை செய்ய பெண்களுக்கு பலம் இருப்பது போலவே, அவ்வப்போது பலவீனமும் ஏற்படுகிறது. பொதுவான பாதிப்புகள் மட்டுமின்றி, முதல் மாதவிடாய் தொடங்கி மெனோபாஸ் காலம் வரையிலான மாதவிடாய் கால பிரச்னைகளையும் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தவிர்க்க முடியாத சில உடல் உபாதைகளின் போது ஏற்படும் வலிகளை பொறுத்துக்கொள்ளும்அளவு நம் உடல் ஆரோக்கியம் நலமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்ளிமென்ட் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிரப்ப இவை கணிசமாக உதவுகின்றன. இதுபோன்ற சப்ளிமென்ட் உணவுகள் இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருக்கும். அவிஸ் ஆயுர்வேதா நிறுவனம் ஆயுர்வேத முறையில் பல்வேறு இயற்கை மூலிகைகளால் தயாரித்துள்ள பஞ்சஜீரக குடம் லேகியம் பெண்களுக்கு ஒரு சிறந்த சப்ளிமென்ட் உணவு.

இதில் சீரகம், முண்டி, தன்யகம், சதகுப்பி, தேவதாரு, குராசனி ஓமம், கரவி மூலிகை, பெருங்காயம், கசமர்டா, நீண்ட மிளகு, நீண்ட மிளகு வேர், அஜமோதா, சோம்பு, சித்திரி அல்லது கொடிவேல், முஸ்தா, அக்கரகாரம் போன்ற மூலிகைப் பொருட்களுடன் வெல்லம், நெய், பால் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த லேகியத்தை காலை, இரவு இரு வேளைகளிலும் உணவிற்குப் பின் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளலாம். தினமும் தொடர்ந்து இதனை உட்கொள்ளும்போது பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு உடல் உபாதைகள் நீங்கும்.

இது கருப்பையில் உள்ள நச்சினை நீக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும், பிரசவத்திற்குப் பின் ஏற்படும் பலவீனம் மற்றும் சோர்வை குறைக்கும், தாய்மார்களுக்கு பால் சுரக்கவும் உதவும். பெண்களின் நலிந்த உடலை சீர்படுத்தி கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான உடலமைப்பை பராமரிக்க உதவுகிறது.

மேலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பூப்பெய்தும் காலம் தொடங்கி அனைத்து வயது பெண்களும் இந்த லேகியத்தை உட்கொள்ளலாம். பஞ்சஜீரக குடம் லேகியம், பெண்களுக்குத் தேவையான ஸ்டாமினாவை அளித்து உடல் மற்றும் மனம் இரண்டையும் புத்துணர்வாக வைக்க உதவுகிறது” என்றார் டாக்டர் ஆஷிகா.

தொகுப்பு - ஆர்.ஆர்