Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வீர தீர செயல்கள் புரிந்த குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கு வீர தீர செயல்கள் புரிந்த குழந்தைகள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர, தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கிறது.

விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி ‘வீர் பால திவாஸ்’ என்று அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதை பெற 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காருக்கான வழிகாட்டுதல்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.