ராமேஸ்வரம், ஜூலை 30: ராமேஸ்வரம் பரஸ்பூர் விரைவு ரயிலில் ரயில்வே போலீசார் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்திற்கு (நேற்று வந்த பரஸ்பூர் விரைவு ரயிலை தமிழ்நாடு ரயில்வே போலீசார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். பி2 பெட்டியில் கிடந்த ஒரு மூட்டையை ஆய்வு செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்கள் ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனை கைப்பற்றி ரயில் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பாக ரயில் நிலைய சுற்று வட்டார பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். சட்ட விரோதமாக விற்கப்படும் குட்காவின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் ஆகும்.
+
Advertisement