Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் கூறிய சாரி என்ற வார்த்தைக்கு டிக்ஸ்னரி பார்த்து இபிஎஸ் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி கிண்டல் பேச்சு

ஆலந்தூர்: முதல்வர் கூறிய சாரி என்ற வார்த்தைக்கு டிக்ஸ்னரி பார்த்து இபிஎஸ் அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டும், என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வட்ட திமுக சார்பில் பாகம் எண்:342 பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ மக்கள் இயக்கம் சார்பாக வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி பழவந்தாங்கல் நேரு காலணியில் நடந்தது. ஆலந்தூர் பகுதி திமுக செயலாளரும் மண்டல குழு தலைவருமான சந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் யேசுதாஸ், கவுன்சிலர் தேவி யேசுதாஸ் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கும் பணியினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் திமுக உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மக்கள் இயக்கத்தை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி, வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

திமுக அரசு செய்துள்ள 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்து சொல்லியும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் செய்த துரோகத்தை விளக்கியும் உறுப்பினர்களை சேர்க்கிறோம். தமிழர்களை ஒரணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பெண்கள் உற்சாகமாக வந்து உறுப்பினர்களாக சேறுகின்றனர். இது நல்ல தொடக்கமாக உள்ளது. கூட்டணி என்பது வேறு. கட்சியின் கொள்கை என்பது வேறு. 67ல் எதிராக இருந்த ராஜாஜியும், மார்க்கிஸ்ட் கட்சியும் ஒரே மேடையில் அமர வைத்தது திமுக. இந்த விவகாரத்தில் கூட்டணியை எப்படி டீல் செய்ய வேண்டுமோ அப்படி தலைவர் டீல் செய்வார். அஜித் குமார் மரண விவகாரத்தில் எங்கள் கடமையை நாங்கள் செய்து விட்டோம் முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசிவிட்டார் திமுக சார்பில் ரூ.5லட்சம் வழங்கி இருக்கிறோம். அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முதல்வரே சாரி என்று கூறியுள்ள நிலையில் கருத்து சொல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாரி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று டிக்ஸ்னரி பார்த்து தெரிந்து கொள்ள சொல்லுங்கள். சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு முன்பாகவே முதலமைச்சரே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், அவைத்தலைவர் சுந்தர்ராஜன், பகுதி துணை செயலாளர் ராஜேஸ்வரி சத்யா, இளைஞர் அணி அமைப்பாளர் விக்கி(எ) விக்னேஷ், வட்ட செயலாளர்கள் ஜெ.நடராஜன், இ.உலகநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் மு. சத்யா, ஆர்.பாபு, இளைஞர் அணியை சேர்நத் விஜய் பாபு, சந்திரசேகர், சீனிவாசன், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.