அறந்தாங்கி, ஆக. 20: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து மணமேல்குடி தாசில்தாருக்கு புகார்கள் எழுந்தன.
புகாரின் பேரில் மணமேல்குடி வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கோட்டைப்பட்டினத்தில் பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அதில் வாடகை வீடு மற்றும் இறால் பண்ணைகள் அமைத்து இருந்தது தெரிய வந்தது இதையடுத்து, கலெக்டர், ஆர்டிஓ.விற்கு தகவல் அனுப்பப்பட்டன. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்து உள்ள நபகர்களுக்கு ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பபட்டது.
இதையடுத்து தனிநபர்கள் ஆக்கிரமைப்புகளை அப்புறபடுத்த முன்வரவில்லை. இதையடுத்து, மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறபடுத்தினர். இந்த அதிரடி நடவடிக்கையால் கோட்டைப்பட்டினத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.