Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியேற்பு கலெக்டர், அரசு அதிகாரிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை, நவ.27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியான ‘இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.” என்ற உறுதிமொழியினை, கலெக்டர் அருணா, வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்.ராஜராஜன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஜெயசுதா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.