பாடாலூர், ஆக. 20: ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொது மக்களின் நிலப்பிரச்சினையை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி. ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் தாலுகா வருவாய்துறையினர் இணைந்து ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது.
விசாரணை முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, ராமர், நல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நில பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர். முகாமில் பெறப்பட்ட மொத்தம் 19 மனுக்களில், 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.