ஜெயங்கொண்டம், அக்.26: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வரும் 27ம் தேதி அன்று சூரசம்காரம் விழா நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தினசரி இரவு சுப்ரமணியர் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வரும் 27ம் தேதி அன்று நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடந்த 21 ம் தேதி அன்று சுவாமி படியிறக்குதல் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் மாலையில் ஒவ்வொரு வகையறாக்கள் சார்பாக மண்டகப்படி சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று மண்டக படி வகையறாக்கள் கொண்டுவரும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தி சிறப்பு தீபாராதனை நடைபெறும் அதன் பின்னர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெறுகிறது.
