பெரம்பலூர், டிச. 6: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை 25சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
+
Advertisement

