ஜெயங்கொண்டம் டிச.5: நாகமங்கலம் அருகே மருத்துவ சிகிச்சையளித்த ஓய்வு செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் சிங்காரத்தோப்புவை சேர்ந்த பெஞ்சமின் செல்வராஜ் இவரது மனைவி ஜெனோவா ஆரோக்கியமேரி (64). இவர் க. பொய்யூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஜெனோவா ஆரோக்கியமேரி ஓய்வு பெற்ற பின்னர் நாகமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அவ்வூரை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

