Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா

திருவள்ளூர்: பங்குனி உத்திர திருவிழவை முன்னிட்டு ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில். இங்கு, கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 21ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 25ம் தேதி இரவு முதல்நாள் தெப்ப உற்சவமும், ஸ்ரீ பஞ்சமூர்த்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை ஸ்ரீ உமா மகேஸ்வரர் தரிசனமும், இரவு 2ம் நாள் தெப்ப உற்சவமும், ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 27ம் தேதி இரவு 3ம் நாள் தெப்ப உற்சவம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று பங்குனி உத்திர திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.வி.கருணாகரன், பி.ராஜு, எஸ்.விஜயகீர்த்தி, டி.எஸ்.பாலசுப்பிரமணி, ஜெ.ஆர்.கோபிநாத் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.