பந்தலூர்,டிச.3: பந்தலூர் பகுதியில் எஸ்ஐஆர் பணிகளை திமுகவினர் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பந்தலூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை திமுக மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், தேர்தல் மேற்பார்வையாளருமான பரமேஷ்குமார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து அதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் நகர செயலாளர் சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

