ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்; இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கடும் வரி விதிப்பை முன்மொழிந்தார். ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜப்பான் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதிப்பதாக குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் வரி விதிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷீகெருவுக்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி இருந்தார். ஜப்பானுக்கான வரியை அமெரிக்கா 15 சதவீதமாக குறைத்து வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
இதேபோல் இந்தோனேஷியா மீதான 19 சதவீத வரியையும் அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார். மேலும் பிலிப்பைன்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வரிகளுக்க 19 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.