பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த பெண்ணை மீட்ட7 இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.47 லட்சம் பரிசு: சிங்கப்பூர் அறக்கட்டளை அறிவிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் காத்தோங் சாலையில் கடந்த 26ம் தேதி ஒரு பெண் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்தது. இதை பார்த்த அருகில் பணியாற்றி கொண்டிருந்த இந்திய தொழிலாளர்கள் அந்த பெண்ணை கயிறு மூலம் பள்ளத்தில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 இந்திய தொழிலாளர்களான பிச்சை உடையப்பன் சுப்பையா,வேல்முருகன், சரவணன், வீரசேகர் அஜித்குமார்,சந்திரசேகரன், ராஜேந்திரன் ஆகியோரை சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் நேரில் சந்தித்து பாராட்டினார். 7 பேருக்கும் பரிசு வழங்கப்படும் என்று தனியார் அறக்கட்டளை அறிவித்தது.
விரைந்து செயல்பட்டு ஓர் உயிரைக் காப்பாற்றிய அவர்களின் தைரியம் சிங்கப்பூரர்களின் உள்ளத்தைத் தொட்டிருப்பதாக ஒரு தனியார் அறக்கட்டளை தெரிவித்தது. இதற்காக திரட்டப்பட்ட 47 லட்ச ரூபாய் விரைவில் 7 இந்திய தொழிலாளர்களுக்கும் பரிசாக வழங்கப்படும்’’ என்றார்.