தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் 3 முக்கிய அணுமின் நிலையங்களை தாக்கியது. பின்னர் இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் “ஓமன் வளைகுடாவில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதைத்தொடர்ந்து ஈரான் கடல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்த பகுதிக்கு சென்றது.
அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க போர்க்கப்பலை விலகி செல்லும்படி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ஈரானின் ஹெலிகாப்டரை விலகி செல்லஅமெரிக்க போர்க்கப்பல் எச்சரிக்கை விடுத்தது. இது ஈரானின் ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பு திட்டக்குழுவின் பாதுகாப்பில் உள்ளது என பதிலடி கொடுத்ததும் அமெரிக்க போர்க்கப்பல் பின்வாங்கி சென்றது.