நியூயார்க்: அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான விநியோக தடத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள புலம் பெயர்ந்தோருக்கு அவற்றை மேலும் அணுகக்கூடியதாகவும், திறமையாக மாற்றவும் அவற்றை நெறிப்படுத்துதலுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் 8 இடங்களில் புதிய இந்திய தூதரக மையங்களை இந்தியா திறந்துள்ளது. பாஸ்டன், கொலம்பஸ், டல்லாஸ், டெட்ராய்ட், எடிசன், ஆர்லாண்டோ, ராலே மற்றும் சான் ஜோன்ஸ் ஆகிய இடங்களில் புதிய இந்திய தூதரக விண்ணப்ப மையங்களை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் குவாட்ரா வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இங்கு பாஸ்போர்ட், விசா, வாழ்க்கை சான்றிதழ், பிறப்பு, திருமண சான்றிதழ், காவல்அனுமதி உள்ளிட்ட அனைத்து தூதரக சேவைகளும் வழங்கப்படும். 8 புதிய சேவை மையங்கள் மூலமாக அமெரிக்க முழுவதும் உள்ள தூதரக மையங்களின் எண்ணிக்கையானது 17 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் லாஸ் ஏஞ்சல்சிலும் கூடுதல் தூதரக சேவை மையம் தொடங்கப்பட உள்ளது.