டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற ஆணைக்கு பிறகும் முடிவெடுக்காமல் தாமதித்த ஆணையத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை 2026 ஜன.23க்கு ஒத்திவைத்தது.
+
Advertisement