தஞ்சை: தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; 1,250 மூட்டைகள் லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நெல் கொள்முதலுக்காக 61 லட்சம் சாக்கு பைகள் கொண்டு வரப்படுகின்றன.
நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது.