சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: கல்வியே நமது இனத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனச் செயலாற்றி வரும் நமது திராவிட மாடல் அரசு இன்று நடத்தவுள்ள கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அன்புச் சகோதரர், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாசத்துடன் வரவேற்கிறோம்.
நமது அரசின் சாதனைத் திட்டங்களான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் விரிவாக்கமும் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மாணவச் செல்வங்களின் முகங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.