கோவை: கோவை வால்பாறை அருகே ரோலக்ஸ் காட்டு யானை உயிரிழந்தது. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட ரோலக்ஸ் யானை டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் விடப்பட்டது. மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வால்பாறை அருகே உயிரிழந்தது. யானைக்கு நாளை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பேசுகையில்; அக்டோபர் 17-ல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை, மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டது; சிக்னல் மூலம் தினமும் யானையை கண்காணித்து வந்தோம் இன்று மதியம் 2 வரை மேய்ச்சலில் இருந்தபோது ஒரு பெரிய மேட்டில் இருந்து யானை வழுக்கி விழுந்து விட்டது; எந்திரித்துவிடும் என நினைத்தோம்; ஆனால், 4 மணிக்கு யானை உயிரிழந்து விட்டது என்று கூறினார்.


