சென்னை: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. வினாடிக்கு 1,330 கன அடியாக நீர்வரத்து உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3110 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
+
Advertisement

