Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாய்லாந்து நாட்டிற்கு சென்றபோது மாயமான வெள்ளூர் வாலிபரை மீட்க ராகுல்காந்தி மூலம் துரித நடவடிக்கை

*குடும்பத்தினரிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உறுதி

ஸ்ரீவைகுண்டம் : தாய்லாந்து நாட்டுக்கு சென்றபோது மாயமான வெள்ளூர் முத்துக்குமாரை மீட்க பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மூலம் துரித நடவடிக்கை எடுப்பதாக குடும்பத்தினரிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (32).

ஆன்லைன் விளம்பரம் மூலமாக தாய்லாந்தில் உள்ள கம்பெனி வேலைக்காக கடந்த ஜூலை 22ம்தேதி தாய்லாந்து சென்றார். பேங்காங் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து வாட்ஸ்அப் கால் மூலமாக தனது மனைவி சுந்தரியிடம் தாய்லாந்து வந்துசேர்ந்ததாக தகவல் தெரிவித்தார். பிறகு அங்குள்ள ஓட்டலுக்கு சென்று தங்கியபிறகு இதுகுறித்தும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பிறகு மாயமான முத்துக்குமாரிடம் இருந்து எந்தவிததகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுந்தரி தூத்துக்குடியில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் முத்துக்குமார் குடும்பத்தினரை வெள்ளூரில் உள்ள அவரது வீட்டில் ஊர்வசி அமிர்தராஜ் நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார். “ அப்போது அவர் கூறுகையில் ‘‘தாய்லாந்தில் முத்துகுமார் மாயமானது குறித்து தமிழக அரசின் மூலமாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சருக்கும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளதோடு அவரை மீட்கும் முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டுள்ளோம்.

முத்துக்குமாரிடம் இருந்து அவர் அனுப்பியது போன்று குறுச்செய்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மூலமாக ஒன்றிய அரசிடம் பேசி முத்துகுமாரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்’’ என உறுதிப்படத் தெரிவித்தார்.

அப்போது எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர்,மாவட்ட பொதுச்செயலாளர் காங்கிரஸ் எடிசன், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, நகரத் தலைவர் கருப்பசாமி, ஊடகப் பிரிவு ஜேம்ஸ், முத்துமணி, இளைஞர் அணி முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயசீலன், ஸ்ரீவை வட்டாரச் செயலாளர் நிலம் முடையான், பேட்மா நகர கிராம கமிட்டி தலைவர் நவாஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மகாராஜன், முன்னாள் நகரத்தலைவர் பாலகிருஷ்ணன், வெள்ளூர் கிராம கமிட்டி தலைவர் மகேஷ், செல்வம், நலராஜபுரம் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.