ரேபிஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம் வன விலங்கு தாக்குதலில் உயிரிழப்பவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
*விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வுகாண கேரளா அரசைபோல ஆக்கபூர்வமான முடிவு எடுக்க வேண்டும், இரண்டுமுறை வனத்துக்கு வெளியே காட்டு பன்றிகளை சுடுவதற்கு அனுமதி கிடைத்தும் அதை செயல்படுத்தாமல் வனத்துறை அலட்சியமாக உள்ளது.
வனத்துக்கு வெளியே காட்டுப் பன்றிகளை சுடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி அதை முறியடிப்பது, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளால் உயிரிழக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் தமிழகஅரசு வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காரமடை வெங்கடேஷ், கோவனூர் பெருமாள்சாமி, சின்ராஜ், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.