Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரெட்டியார்சத்திரத்தில் ரூ.29 கோடி மதிப்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட 833 பேருக்கு ஆணைகள்

*அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 833 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, துணை தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி வரவேற்று பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 833 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பிலான கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கி விட்டு பேசியதாவது:

நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலம் வழங்கியது, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து கொடுத்தது, தற்போது வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தந்தது என கலைஞரின் கனவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்கு அதிலும் பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு வழங்க கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளார்.

தற்போது இந்த ஆண்டில் 1 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 2026க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வரால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பேசப்படுகிறது.

ஓய்வறியா சூரியனாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அயராது உழைத்து வருகிறார். கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் பயன்பெறும் பயனாளிகள் ஒரு ரூபாய் கூட யாருக்கும் தரவேண்டியதில்லை.

ஆத்தூர் தொகுதியில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் கூட்டுறவு துறையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதுபோல இந்த திட்டத்திலும் யாருக்கும் நீங்கள் பணம் தரவேண்டியதில்லை.

ரெட்டியார்சத்திரம் பகுதி மாணவ, மாணவிகள் நலன்கருதி ஒரு வருடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் அரசு கல்லூரி கட்டி முடிக்கப்பட உள்ளது. காவிரி தண்ணீர் மட்டுமின்றி வைகை தண்ணீரும் ரெட்டியார்சத்திரம் மக்களுக்கு கிடைக்க நான் ஏற்பாடு செய்வேன். இது உறுதி. இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மேற்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, பிடிஓக்கள் கிருஷ்ணன், மலரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஸ்பெருமாள், பேரூராட்சி தலைவர் நந்தகோபால், மாமன்ற உறுப்பினர் சுபாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மாணவரணி அமைப்பாளர் செல்வம், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பாலன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருப்பதி, காளீஸ்வரி மலைச்சாமி,

விவேகானந்தன், ஜஸ்டின் மைக்கேலம்மாள், சுமதி கணேசன், விவேகானந்தன், பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரி அன்பரசு, அருணாச்சலம், ராதாதேவி சாமிநாதன், செல்வராணி ராமசாமி, தனபாக்கியம், நிர்மலா இன்பராஜ், வெள்ளைத்தாய் தங்கபாண்டியன், லெட்சுமி, தனலெட்சுமி ராமமூர்த்தி, மன்மதன் என்ற காமாட்சியப்பன், சின்ன (எ) முருகன், பால்ராஜ், துணை தலைவர்கள் ரங்கசாமி, கிருஷ்ணவேணி காளியப்பன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார். லிங்குசாமி, வீரபாண்டி, விஜயகுமார், இன்னாசி, செந்தில்முருகன், ரஞ்சித் குமார், கர்ணன், நிர்வாகிகள் அம்பை ரவி, உதயகுமார், சக்கரவர்த்தி மணிமாறன், செல்வம், ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.