சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தனது தந்தை நலமுடன் உள்ளார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; பயப்படும்படி எதுவும் இல்லை. ஐசியூவில் ராமதாஸ் இருப்பதாகவும், அவரை நேரில் சந்திக்கவில்லை. ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். 6 மணி நேரத்துக்கு பிறகு ராமதாஸ் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். மேலும் 2 நாட்கள் மருத்துவ ஓய்வில் இருக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் 2 நாள் ஓய்வுக்கு பிறகு ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறினார்.
+
Advertisement