Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களில் ஒருவர்.. கல்விக்கண் திறந்தவர்: பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

சென்னை: கல்வி முதல் தொழில் வளர்ச்சி வரை நவீன தமிழ்நாடு இன்றைக்கு எதற்கெல்லாம் பெருமைப்பட்டு கொல்கிறோதோ அவற்றில் கணிசமானவற்றுக்கு விதைபோட்ட பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று. விருதுபட்டு என்ற அழைக்கப்பட்ட இன்று 1903 ஜூன் 3இல் பிறந்த காமராஜர் இளம்வயதில் போராட்டத்துக்கு அஞ்சாத தியாகி. கிட்டதட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். காந்தி, நேருவை பார்த்து அரசியலுக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் அவர் தலைவராக ஏற்றுக்கொண்டது வீரர் சத்தியமுர்த்தியைதான். தமிழ்நாடு காங்கிரசில் சத்யமுர்த்திக்கும், ராஜாஜிக்கும் இடையிலான அதிகார சண்டை திவிரான போது ராஜாஜியை எதிர்கொள்ள காமராஜர் தான் பொருத்தம் என்று முடிவு செய்தார் சத்தியமூர்த்தி.

1940இல் ஆட்சி ராஜாஜி கையில் இருந்தாலும் கட்சி முழுமையாக காமராஜரின் கீழ் வந்தது. அடுத்த கால் நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை தீர்மானிப்பவராக இருந்தார் காமராஜர். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்ததால் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலக, 1957இல் தமிழக முதல்வரானார் காமராஜர். பதவியேற்ற கையோடு குலக்கல்வி திட்டத்தை ஒலித்தவர், அனைவருக்குமான கல்விக் திட்டத்தை கொண்டுவந்தார். 1957முதல் 1962 வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் 13,000க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளோடு லட்சக்கணக்கானோரின் கல்விக்கண்ணையும் திறந்தார். மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்ந்தது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டபோது, நேரு ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தையே திறந்தவைத்தார். காமராஜரை படிக்காதவர் என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடிப் தேடிப்படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு முறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை மாசற்ற ஆங்கிலம் என்ற புகழ்ந்து எழுதியது ஆங்கில நாளிதழ். அனாலும் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பெரும்பாலும் அவர் பேசியது தமிழில்தான்.

கையெழுத்து தமிழில் தான். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. மின் உற்பத்திக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின்னுற்பத்தித் திட்டம் போன்றவற்றையும் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவையே. நீர் பாசனத்துக்காக மணிமுத்தாறு அணை, வைகை அணை, கீழ் பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், காவிரி கழிவுகள் வடிகால் திட்டம், குள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளை திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.

தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் காமராஜர் ஆட்சியில்தான். 9 ஆண்டு காலம் முதல்வர், மும்முறை எம்.பி.யாக இருந்தாலும் மக்கள் எளிதில் அணுகும் தலைவராகவே இறுதிவரை வாழ்ந்தார். மூத்த தலைவர்கள் அரசு பொறுப்புகளில் இருந்து விலகி கட்சிப் பொறுப்புகளை ஏற்றக்கொள்ள வேண்டும். இளைய தலைவர்கள் அரசு பதவிகளில் அமர்த்த வேண்டும் என்ற கே பிளானை நேருவிடம் முன்மொழிந்த காமராஜர், தானும் முதல்வர் பதவியை துறக்க தயாரானார். இது ஒரு அரசியல் தற்கொலையாக அமையும் என்று அவர் மீது பெரும்மதிப்பு வைத்திருந்த பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் காமராஜர் பதவி விலகியத்துடன், பக்தவத்சலத்தைப் பதவியில் அமர்த்தினார். இறுதியில் பெரியார் சொன்னது போலவே நடந்தது. காமராஜரோடு சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸும் சரிந்தத.