திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கோயில்களின் திருப்பணிகளில் ஒரு அமைதிப் புரட்சி: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக) பேசுகையில், பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோயிலையும், பூலாங்குளம் உச்சிமாகாளியம்மன் கோயிலையும் பார்த்து சென்றீர்கள். அந்த கோயில்களுக்கான நிதியும் இந்தாண்டு உயர்த்தப்படுமா?’’ என்றார். இதற்கு பதில் அளித்து அடைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,‘‘பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோயில் மற்றும் பூலாங்குளம் உச்சிமாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாக இருந்தாலும் உறுப்பினரின்கோரிக்கையை ஏற்று ரூ.2.70 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், 1000 ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வாழும் பகுதி கோயில்கள் மற்றும் 1000 கிராமப்புறத் கோயில்களின் எண்ணிக்கை தலா 1,250 ஆக உயர்த்தியதோடு, திருப்பணி நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரையில் 10,000 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 4 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ஒரு அமைதியான திருப்பணி புரட்சி நடத்திய ஆட்சியை ஆன்மிக ஆட்சி என ஆன்மிகவாதிகள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.