திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் கடந்த 2022ம்ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும் ஜெ.மகாதேவன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பேரூராட்சி தலைவர் உ.வடிவேல் விபத்தில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் அனிதா சங்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அனிதா சங்கர், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதன்பின்னர் அவருக்கு பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் கோ.சதீஷ், கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.