Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

காரைக்குடி: காளையார்கோவில் அருகே வாகைகுளம், நல்லேந்தல் மறவமங்கலம் பகுதியில் உள்ள கல்லுகுளக்கால் வீர குளக்கால் என்ற ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதியில் 2600 முதல் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள், இரும்பு எச்சங்கள் மற்றும் கல் வட்டங்கள் காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர் முனைவர் தி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காளையார்கோவில் அருகே வாகைகுளம் பகுதியில் உள்ள கல்லுகுளக்கால், வீர குளக்கால் என்ற ஆற்றுப்பள்ள தாக்கு பகுதியில் முதுமக்கள் தாழிகள் உடைந்து ஆங்காங்கே கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது.

20 ஏக்கருக்கு மேற்பட்ட ஆற்றுப்பள்ளதாக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மண்ணின் மேற்பரப்பில் குவியலாக காணப்படுகிறது. இவை பெருங்கற்காலம் காலகட்டத்தை சேர்ந்த 2600 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். பெருங்கற்காலம் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதிகள் என்றும் நாகரீகமான ஒரு வாழ்க்கை தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஒரு அடையான நினைவு சின்னங்கள் என்றும் தெரிய வருகிறது. ஒரே இடத்தில் 5 அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழிகளும் உள்ளேயே மூன்று அடுக்கில் உள்ள முதுமக்கள் தாழிகளும் உள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளின் மேற்பரப்பு நுழைவுவாய் 3 அடி அகலமும், உள்பகுதி 7 அடிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கும்.

தவிர இந்த இடங்களில் இரும்பு எச்சங்களும் ஆங்காங்கே காணப்படுகிறது. தவிர கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் அதிக அளவில் காணப்படுகிறது. ஒருசில பானை ஓடுகளில் கீறல் குறியீடுகள் உள்ளன. மேலும் கல்வட்டங்கள், சுண்ணாம்பு பாறை கற்கள் காணப்படுகின்றன. இந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய வரலாறு காணப்படுகிறது. இதனை அகழாய்வு செய்து இந்த வரலாற்றை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.