Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய்க்கு மனசாட்சிேய இல்ல...புறக்கணிப்பால் பெரம்பலூர் ரசிகர்கள் கொந்தளிப்பு சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பெரம்பலூர்: பெரம்பலூரில் நள்ளிரவு வரை காத்திருந்தவர்களை பார்க்காம மனசாட்சியே இல்லாம போய்விட்ட விஜய் மத்தவங்க மனசாட்சிய பற்றி பேசுகிறார் என்று, பெரம்பலூரை புறக்கணித்ததால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சோஷியல் மீடியாவிலும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரசாரம் பயணம் தொடங்கி உள்ளார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்திக்க இருப்பதாக அவர் அறிவித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது போலீசார் விதித்த நிபந்தனைகளை அவரது ரசிகர்கள் காற்றில் பறக்க விட்டதால் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்தது தொடங்கி அவர் பிரசார இடத்திற்கு செல்வது வரை அவரது ரசிகர்களால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்கி போகும் அளவுக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அவரது ரசிகர்கள் தொல்லை கொடுத்தனர்.

திருச்சி, அரியலூரை தொடர்ந்து குன்னம், பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இந்த 2 இடங்களிலும் விஜய் பிரசாரம் செய்ய வில்லை. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவுக்கு வந்த விஜய்யின் பிரசார வாகனம், பிரசாரம் நடக்க இருந்த மேற்கு வானொலி திடலுக்கு செல்லாமல் அப்படியே திரும்பி சென்னைக்கு சென்று விட்டது. இதனால் பெரம்பலூரில் பிற்பகல் 2.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள், சிறுவர்கள் வீட்டுக்குசெல்ல நினைக்காமல் விரக்தியில் அப்படியே நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து விஜய் ரசிகர்கள் கூறுகையில், பெரம்பலூர் பிரசாரம் ரத்தானதை முறைப்படி அறிவிக்கவும் இல்லை. கிட்டத்திட்ட 10 மணி நேரம் காத்திருந்தோம். விஜய் பேசாமல் சென்றது ஏமாற்றமளிக்கிறது. பிரசாரம் ரத்து செய்யப்பட்டதையாவது முறைப்படி அறிவித்திருக்கலாம். அதையும் செய்யாமல் 10 மணி நேரம் காத்திருந்த எங்களை விஜய் அவமதித்து விட்டார் என்றனர்.

இஸ்லாமிய பெண் ரசிகை ஒருவர், மீடியாக்களுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், விஜய்க்கு ஓட்டு போட முடியாது. நானும் விஜய் பேன் தான். இவ்வளவு நேரம் நாங்கள் நின்னோமுல்ல... என்ன பிரயோஜனம். நள்ளிரவையும் தாண்டி அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. காலையிலிருந்து நிற்கிறேன். சும்மா ஒன்னும் இல்லை. பொய் ஒன்னும் நாங்கள் சொல்றது கிடையாது. இவ்வளவு நேரம் நாங்க நிக்கிறோமுல்ல.

வந்து ஒரு கைய கூடவா காட்ட முடியாம நேரமாயிடுச்சு. விஜய்க்கெல்லாம் எங்க ஓட்டு இல்லைங்க. நானே அவரோட பேன் தான், ஓட்டு இல்லை. கோவம் தான். ஒரு தண்ணி பாட்டில் கொடுத்தாங்களா. அவ்வளவு நெருக்கடியில நின்றோமுல்ல. மனசாட்சியே இல்லாமல் போயிட்டாரு. இவரு மத்தவங்க மனசாட்சியை பத்தி பேசுறாரு. இப்ப இவர் நம்பிக்கை துரோகம் பண்ணலையா. அப்ப என்ன நெனச்சிட்டு இருக்கீங்க. நம்ப வச்சு கழுத்த அறுக்குறீங்களா. இன்னொரு நாள் மறுபடி எப்படி வருவாரு. இன்னொரு நாள் வந்து மறுபடி இதேமாதிரி நெருக்கடியாச்சுன்னு திரும்பி போகுறதுக்கா என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். அப்போது அவரது அருகில் நின்றிருந்த ரசிகர்கள் அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

விஜய்யின் முதல் பிரசாரமே சொதப்பலாக முடிந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். விஜய்யை கண்டித்தும், கலாய்த்தும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களை நிறைத்து வருகிறார்கள். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் விஜய்யை பகிங்கரமாய் கலாய்த்து வௌியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், பெண்களுக்கு அரசு வேலையில 40 சதவீதம் குடுப்பேன்னு சொன்னீங்களே.. செஞ்சீங்களா?.. அப்படின்னு ஒன்னு சொன்னீங்கள்ல.. இதே செப்டம்பர் மாசம் 13ம் தேதி 2021 சட்டமன்றத்தில பெண்களுக்கு அரசு வேலையில 40சதவீதம்னு சட்டம் கொண்டு வந்தாரு முதல்வர். அது மட்டுமில்ல இந்தியாவிலேயே பெண்கள் வந்து பாத்தீங்கன்னா.. வொர்க் பொர்ஸ் இருக்கில்ல.. 43 சதவீதம் தமிழ்நாட்டு பெண்கள் தான். அப்புறம் ரெண்டாவது இன்னொன்னு என்னா சொல்றீங்க... அரசு வேலை வாய்ப்பில் 75 சதவீதம் தமிழர்களுக்குன்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா?.. அப்படின்னு கேட்டிங்களே... 100 சதவீதம் தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டு டிஎன்பிஸ்சில வேலைன்னு உத்தரவு போட்டாரு. சரியா?..

அதுல முக்கியமானது என்னான்னா.. தமிழ் தெரிஞ்சா மட்டும்தான் நீ அரசு வேலைக்கே வரமுடியும்னு ஒரு உத்தரவ போட்டாரு. வேலைவாய்ப்புல என்னமோ கேட்டிங்களே... பத்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கிருவீங்களா.. அப்படின்னு.. போன வருசம் நடத்துனாரே குளோபள் இன்வெஸ்டர்ஸ் மீட்னு... சென்னையில.. அதுல மட்டுமே 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவரு. சரியா?.. படிச்சிட்டு வந்து உனக்கு இந்த அறிக்கையெல்லாம் எழுதி குடுக்க சொல்லி அடுத்த கூட்டத்திலயாவது ஒழுங்கான அறிக்கைய படிங்க விஜய்... நன்றி என்று கூறியுள்ளார்.