சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அம்மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இரா.ஆவுடையப்பன் நியமிக்கப்படுகிறார். இந்த மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நாங்குநேரி ம.கிரகாம்பெல் நியமிக்கப்படுகிறார். இந்த மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகள் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement