சென்னை: தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் நேற்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், அடிமட்ட தொண்டர்களின் மனநிலை, மாவட்ட, வட்டார தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர்களிடம் ராஜேஷ் குமார் ஒன்று விடாமல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அனைத்தையும் ராகுல்காந்தி நிதானமாக கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்து ராகுல்காந்தி விவாதித்தாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Advertisement