சென்னை: தமிழ் மெல்ல மெல்ல சாகும் என தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோவிற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சென்னை பனையூரில் த.வெ.க. செயலியை விஜய் நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழை தவறாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை என்பது கட்சிக்கு வளர்ச்சிக்கு ஒரு படியாகும். தமிழகத்தில எந்த மாவட்டத்தகு சென்றாலும் தாய்மார்கள் கேட்டும் கேள்வி எப்படி தவெக-வில் இணைவது தான். அடிப்படை உறுப்பினர் தான் நம் கழகத்திற்கு முதுகெலும்பு, புதிய உறுப்பினர்களால் புதிய சக்தியை அடைகிறோம். நமளடைய மாநில பொறுப்பாளர்கள் முதல் கிளை வரக்கும் கட்சி பணியில் அமர்த்து இருக்கிறோம் எண்பதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
மாநில பொறுப்பாளர்கள் எண்பலதி ஒரு பேர், மாநில பொறுப்பாளர்கள் பதினோரு பேர், மாநில தகவல் தொழிநுட்ப பிரிவு பதினோரு பேர், மாநில ஊடகர் பிரிவு பதினோரு பேர், மாநில வழக்கர் அணி பதினோரு பேர், மாநில சட்ட ஆலோச அணி பதினோரு பேர், சார்பு அணி நிர்வாகிகள் எட்டாயிரத்தி ஐநூத்தி எண்பலது பேர், கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள் ஒரு லட்சத்தி என்பலதி எழுத்தி ஐம்பது பேர், கிளை நிர்வாகிகள் ஒரு லட்சத்தி பன்னிரண்டாயிரத்தி அறநூத்தி எண்பலது பேர் என மொத்தம் இரண்டு லட்சத்தி தொண்ணூத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பலது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ இவ்வாறு அவர் பேசினார். தமிழை தெளிவாக படிக்க தெரியாதவர்கள், தமிழகம் என்ற கட்சி பெயர் வைத்து உள்ளனர் எனவும், தமிழ் மெல்ல மெல்ல சாகும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ஒரு புதிய மொழி என்றும் கலாய்த்து வருகின்றனர்.