புதுடெல்லி: இந்தியாவின் பிரதமராக தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்தவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு முதலிடத்தில் உள்ளார். இவர் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதியன்று தான் இறக்கும் வரை 6130 நாட்கள் தடையின்றி பிரதமராக ஆட்சி செய்தார். இவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இரண்டாவது இடத்தில் இருந்தார்.
1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை, தொடர்ந்து 4,077 நாட்கள் பதவியில் இருந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார். இந்த நீண்ட அரசியல் பயணம், இந்திய அரசியலில் யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சாதனையை பிரதமர் மோடி தற்போது முறியடித்துள்ளார். அவர் தொடர்ந்து 4,078 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்து, தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய இரண்டாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.