மதுரை: எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்கள் யாரையும் நடிகர் விஜய் பிரிக்க முடியாது என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அவரிடம், ‘‘எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் இருந்த அதே அளவு எம்ஜிஆர் படத்தை, விஜய் தனது பிரசார வாகனத்திலும் பயன்படுத்துகிறாரே’’ என கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜூ பதிலளித்ததாவது: எம்ஜிஆரின் கொள்கைகளும் அவர் உருவாக்கிய கட்சியும் இருக்கிறது. 53 ஆண்டு காலம் கட்சி நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி 3வது தலைமுறைக்கு தலைமை ஏற்றுள்ளார். எம்ஜிஆர் படத்தை, சினிமாவில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் விஜய் காட்டிக் கொள்ளலாம், அதிமுக தொண்டர்களை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வார். புயல் மையம் கொண்டுள்ளது எனச் சொல்வார்களே, அதைப்போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.
+
Advertisement