தமிழ்நாட்டில் அதிமுக மூலமாக காலுன்ற முயலும் பாஜவை விரட்டியடிப்போம்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு
சென்னை: சட்டீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்த பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: பாஜ ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு எல்லாம் மதவாதம், சாதியவாதம், மொழி வாதம் எல்லாம் நடக்கிறது. இந்த மண்ணில் யார் வாழணும், யார் வாழக்கூடாது என்பதை அவர்கள் முடிவு பண்ணுவார்கள். எல்லாரும் ஒரு கட்சியுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அது என்ன கட்சி என்றால் பாஜ. இப்போது கூட தமிழ்நாட்டில் நேரடியாக படையெடுக்க முடியாமல் ஒருத்தர் முதுகில் ஏறி படையெடுக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் படுதோல்வி அடைய ேபாகிறார்கள். அவர்களுடன் தமிழ்நாட்டின் உரிமை, அதிகாரம், பெருமை எல்லாத்தையும் அடமானம் வைத்து விட்டு கூட்டணி வைத்தார்கள் அதிமுகவினர். அவர்கள் நாங்கள் தான் முதல்வரை முடிவு செய்வோம் என்று, இவர்கள் நாங்க தான் முடிவு செய்ேவாம் என்கிறார்கள். ஒரு பொருத்தமில்லாத, இயற்றைக்கு ஒப்பாத ஒரு கூட்டணி. அந்த கூட்டணி மூலம் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முயலுகிறது. இதை முறியடிப்பது தான் ஜனநாயக கட்சிகளின் வேலை. இந்த மதவாதிகளை நாம் விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு தமிழ் மண்ணில் எப்போதும் இடம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், எம்பி ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், துரை சந்திரசேகர், பொதுச்செயலாளர்கள் செல்வம், தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்ெசல்வன், ரங்கபாஷ்யம், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், சிறுபான்மை அணி தலைவர் ஆரிப், மாவட்ட தலைவர்கள் வழக்கறிஞர் முத்தழகன், டெல்லிபாபு, ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாஜ அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.