Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி 3ம் கட்ட சுற்றுப்பயணம்: 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை செல்கிறார்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3ம் கட்டமாக சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், 11.8.2025 முதல் 23.8.2025 வரை மூன்றாம் கட்டமாக சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, 11.8.2025 (திங்கள்) தளி, ஒசூர், வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள். 12ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, 13ம் தேதி - திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகள், 14ம் தேதி - ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகள், 15ம் தேதி - ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதிகள், 16ம் தேதி - செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை தொகுதிகள், 18ம் தேதி - கலசப்பாக்கம், போளூர், அணைக்கட்டு தொகுதிகள், 19ம் தேதி - காட்பாடி, வேலூர், ஆற்காடு தொகுதிகள், 20ம் தேதி - ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் தொகுதிகள், 21ம் தேதி - காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர் தொகுதிகள், 22ம் தேதி - செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் தொகுதிகள், 23ம் தேதி -சோழிங்கநல்லூர், திருப்போரூர் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.