சென்னை: விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் எடப்பாடி முடிவு செய்வார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறை திருத்தப் பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான். திமுக எஸ்ஐஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால் நாங்கள் வேண்டும் என்று சுப்ரீம் கோர் ட்டை நாடுவோம். போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இப்பணிகளை அதிமுக வரவேற்கிறது. அதிமுகவில் வாரிசு அரசியல் என்பது கிடையாது. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை உள்ளது. 2 அமாவாசைக்கு முன்பு கூட மாற்றம் வரலாம். எனவே அந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றி எடப்பாடி முடிவு செய்வார்.
பாஜக தொடர்பாக அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து வருகிறார். அண்ணாமலை சொன்ன கருத்து குறித்தும் எடப்பாடியார் பதில் அளிப்பார். சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார். சீமான் தயவு செய்து எங்களிடம் மோத வேண்டாம். அம்மா மீது பாசம் கொண்டவர்கள் மீது வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக் கொள்வீர்கள். ஆறறிவு உள்ள மனிதனுக்கு சொல் புத்தி சுயபுத்தி இருக்கும். ஐந்தறிவு கொண்ட கடல், ஆமை, காட்டு மரத்திடம் பேசுபவர்களிடம் நாம் பேச முடியுமா?. சீமானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஐந்தறிவு கொண்ட கடல், ஆமை, காட்டு மரத்திடம் பேசுபவர்களிடம் நாம் பேச முடியுமா?
 
 
 
   