சென்னை: திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் நலன் காக்க திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் மற்றுமொரு மகத்தான திட்டமான ‘‘நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்களை நாளை (இன்று) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 1,256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலமாக 17 சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களின் ஆலோசனையோடு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement