சென்னை: கூட்டணி ஆட்சியை பொறுத்தவரை தேர்தல் முடிவை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும் என அன்புமணி தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி, ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 25 முதல் நவம்பர் 9ம் தேதி வரை 108 நாட்கள் தமிழகம் முழுவதும் அரசியல் நடைபயணம் மேற்கொண்டார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் நடைபயணம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 1.20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 3ல் ஒரு பங்குதான் அரசு செய்கிறது. உட்கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டும். திமுக அரசை அகற்றும் கூட்டணியில் பாமக நிச்சயமாக இடம்பெறும். கூட்டணி ஆட்சியை பொறுத்தவரை தேர்தல் முடிவை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டுள்ளேன். இதை பொய் என சொல்லும் திமுகவினர் என்னுடன் விவாதம் செய்யலாம். இவ்வாறு கூறினார்.
+
Advertisement

