சென்னை: பாமக. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளையர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்த சிலரில் ஒருவரும், ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 221ம் நினைவுநாள் இன்று (நேற்று) கடைபிடிக்கப்படுகிறது.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று. தீரன் சின்னமலையின் வீரவரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.