நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ேநற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில்...
நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ேநற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில் நாளை (இன்று) நடைபெறும் எடப்பாடி பிரசாரத்தில் கலந்து கொள்வேன். மேலும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் கண்டிப்பாக பங்கேற்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.