தேர்தலுக்கு முன்பே அரிதாரம் பூச தொடங்கிவிட்ட இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கடல் போல் கொந்தளித்த பெண் மேயர் ஒருவரால் அண்டை மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியிலும் சலசலசப்பு ஏற்பட்டிருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வட மாவட்டங்களில் ஒன்றாக ‘கடல்’ ஊர் இருக்கு.. இங்குள்ள மாநகராட்சியின் பிரதிநிதிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லையாம்.. இதன் புகைச்சல் தொடர்கதையாக நீடித்த நிலையில் சமீபத்தில் பெண் மேயர் தலைமையில் கூட்டம் நடந்ததாம்.....

மாஜி மந்திரியின் திடீர் சுறுசுறுப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சர் திடீர் ஆக்டிவால் ஆச்சரியத்தில் இருக்காங்களாமே நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் திடீரென ஆக்டிவாக இருந்து வருகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறராம்... மாவட்ட முழுவதும் காலையில் ரவுண்ட்ஸ் சென்று வருகிறார். இதை பார்த்து கட்சியில்...

அடிமை சிக்கிவிட்டதாக மலராத கட்சி மகிழ்வதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மீனவ கிராமத்தில் என்ன பஞ்சாயத்தாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நல்ல வார்டு எனும் மீனவ கிராமத்தில் கோயில் விவகாரத்தில் இருதரப்பு உரசால் அடிக்கடி பஞ்சாயத்து ஏற்பட்டதாம். அசாதாரண சூழலால் மக்கள் அச்சமடையவே சமாதான கூட்டத்தை அதிரடியாக கூட்டினாராம் பிரதிநிதியான சபையின் நடுவர். உயர்மட்ட காக்கிகள் அங்கு வந்து அமர ஒருவழியாக சுமுக வழி...

மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார்: wiki யானந்தா

  ‘‘மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் ெசஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் கடந்த 9ம் தேதி தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமைகொண்ட ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இது, முழுக்க முழுக்க...

தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல கம் என்று முடியுற நான்கு எழுத்து ஊர் நகர் ஆட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நகர் ஆட்சி ஆபிசுல புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைமை அதிகாரி முழு நேரம்...

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

  ‘‘பெண் வாரிசை எப்படியாவது சட்டமன்றத்திற்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதில் இலைக்கட்சி மாஜி எம்எல்ஏ குறியா இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘கடைகோடி மாவட்டத்தில் தலைநகர் தொகுதியில் எப்படியாவது தனது பெண் வாரிசை எம்எல்ஏ ஆக்கிவிட வேண்டும் என இலைகட்சி மாஜி எம்எல்ஏ கடும் முயற்சியில் உள்ளாராம்.. ஆனால், அவரது மகனோ, தனது மனைவியை...

புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் விஜயமானவர் திடீரென வெளியில் வருவதும், பின்னர் சைலன்டாக இருந்து வருவதும் ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாக வைத்துள்ளாராம்.. எதையாவது வைத்து அரசியல் செய்து விடலாம் என அவர் நினைக்கிறாரு.....

ஆதாயத்திற்காக ஆஸ்பத்திரிக்கு ஓடிச்சென்ற சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

      ‘‘யூனியன் பகுதி என்டிஏ அணியில் ஏற்பட்ட உரசல், தற்போது மலராத கட்சிக்குள் புகையாக புகைந்து கொண்டிருக்கிறதாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘நாட்டை ஆளும் மலராத கட்சி எப்படியாவது தென் மாநிலங்களிலும் காலூன்றிவிட வேண்டுமென்பதில் குறியாக உள்ளதாம்.. அதுவும் தமிழகத்தை ஒட்டிய புதுச்சேரியில் புல்லட்சாமியை தனது கண்ட்ரோலில் வைத்துள்ள மலராத...

பிரதமர் ரேஞ்சுக்கு டெய்லி வீடியோ அறிக்கை வெளியிடும் இலைக்கட்சி மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காக்கி டிரஸ்க்கான பணிகளை கவனிப்பதைவிட ரியல் எஸ்டேட் பிசினஸை ரொம்பவே சுறுசுறுப்பாக செய்றதா த்ரி ஸ்டார் காக்கி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி காக்கிகள் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 3 எழுத்து காக்கிகள் நிலையத்துல த்ரி ஸ்டார் காக்கி பணிபுரிஞ்சு வர்றாராம்.. குணமான பெயர் கொண்ட இவரு, காக்கிகள்...

என்டிஏ கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காக்கி உயர் அதிகாரி உத்தரவை மீறி பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவரை ராஜஉபசாரம் செய்து வழியனுப்பிட்டதா சொல்றாங்களே எங்க..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல இப்போது இருக்கிற காக்கி உயர் அதிகாரி ரொம்ப கறாரானவராம்.. குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுங்க என்று காக்கிகளுக்கு கடும் உத்தரவு...