மதுராந்தகம்: மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ரயில் மதுராந்தகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் கடும் புகைமூட்டம் இருந்ததால் சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது. வயல்வெளியில் தீப்பற்றி எரிவதால் தண்டவாளம் இருக்கும் பகுதியை புகைமூட்டம் சூழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement