சிவகங்கை: காளையார்கோவிலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் படுத்துக்கொண்டே பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட் செட் வெடித்து காதுகள் படுகாயமடைந்தன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முதியவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement