மதுரை: தென்காசி தலைவன்கோட்டையில் குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவரது மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். தண்ணீர் போன்ற பொதுவான வளங்களை பகிர்ந்து கொள்வதில் கூட ஒடுக்குமுறையா?, குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தெருக்களிலும் போதுமான அளவு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
+
Advertisement