சென்னை: அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத் தரும் திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது. 30,744 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2547 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் 1920 கூடுதல் வகுப்பறைகள், 251 புதிய ஆய்வகங்கள், அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
+
Advertisement