Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூரியா உரம் தட்டுப்பாடு விவசாயிகள் சாலை மறியல்

தாவணகெரே: மாவட்டத்தில், யூரியா உரத் தட்டுப்பாட்டை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவில் யூரியா உரப் பற்றாக்குறையை கண்டித்து கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் (ஹுச்சவ்வனஹள்ளி மஞ்சுநாத் பிரிவு தலைமையிலான) விவசாயிகள் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைப்பின் தாலுகா பிரிவின் பொதுச் செயலாளர் ராஜனஹட்டி ராஜு பேசியதாவது, ‘

தாலுகாவில் நல்ல மழை பெய்துள்ளது, ஆனால் விவசாயிகள் உரம் இல்லாததால் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் விழிப்புடன் இல்லை, தேவையான இருப்புக்களை பராமரிக்காமல் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். உரங்களை உடனடியாகவும் போதுமான அளவும் விநியோகிக்க வேண்டும். இல்லையெனில், வரும் நாட்களில் கடுமையான போராட்டம் நடத்த திட்டமிடப்படும்’ என்றார்.

தகவலறிந்து, தாசில்தார் சையத் கலீம் உல்லா, சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இது தொடர்பாக துணைப்பிரிவு அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் யூரியா உரம் வழங்கப்படும். தற்போத, மறியலை கைவிட்டு, விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.