திருமலை: திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கந்துல துர்கேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாகப்பட்டினம் மற்றும் சென்னை இடையே ஒரு கப்பல் போக்குவரத்தை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் விமானத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ரிஷிகொண்டா அரண்மனை மாற்றப்படும்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் தலைமையில், சுற்றுலாத் துறையை முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய அரசு சுற்றுலாத் துறையை முற்றிலுமாக புறக்கணித்திருந்தனர். ஆனால் கூட்டணி அரசு அதனை முன்னிலை வகிக்கும் வகையில் மாற்றி வருகிறோம் என்றார்.